உள்நாடு 

துப்புக் கொடுத்தால் மிகப்பெரிய பணப்பரிசு – இலங்கை மக்களுக்கு பொலிஸார் அறிவிப்பு

பொலிஸாருக்கு துப்பு வழங்கும் நபர்களுக்கு மிகப்பெரிய பணப்பரிசு வழங்கப்படவுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது. 

போதைப் பொருள் தொடர்பில் சரியான தகவல்களை வழங்கும் நபர்களுக்காக மிகப்பெரிய பணப்பரிசு காத்திருப்பதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

நேற்று முன்தினம் கைப்பற்றப்பட்ட 350 கோடி பெறுமதியான போதைப்பொருள் நேற்று சோதனைக்குட்படுத்தப்பட்டது. அதனை சோதனையிட வந்த போது அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

அதற்கமைய துப்பு வழங்கினால் மிகப்பெரிய பணப்பரிசு தயாராக உள்ளதென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

Leave a Comment