Politics | அரசியல் உள்நாடு 

மஞ்சள் உற்பத்தியில் நாடு தன்னிறைவு – அமைச்சர் இந்திக அனுருத்த

இன்று நாட்டில் மஞ்சள் தட்டுப்பாடு இல்லை மஞ்சள் உற்பத்தியில் நாடு தன்னிறைவு அடைந்து உள்ளது. வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை மற்றும் கட்டிடப் பொருட்கள் கைத்தொழில் மேம்பாட்டு ராஜாங்க அமைச்சர் இந்நிக அனுருத்த தெரிவித்தார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இராஜாங்க அமைச்சர்களுக்கு அவர்களுக்கான பதவிகளைப் பகிர்ந்தது பற்றி மோசமான முறையில் விமர்சனம் செய்த மக்களும் பல ஊடகங்களும் கடந்த அரசாங்கத்தில் அமைச்சர்கள் குளிருட்டப்பட்ட அறைகளில் இருந்து எந்தவித சேவைகளும் செய்யவில்லை.

இன்று அனைத்து அமைச்சர்களும், இராஜாங்க அமைச்சர்களும் கிராமம் கிராமமாகச் சென்று தேவையான பல சேவைகளை செய்து வருவதோடு, இன்று பல அரசு நிறுவனங்கள் அமைச்சர்களின் சிறந்த பெறுபேற்றினைப் பெற்ற நிறுவனங்களாக மாறியுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்..

கடந்த அரசாங்கத்தின் போது தேசிய பாதுகாப்பு வீழ்ச்சியடைந்ததால் சுற்றுலாத்துறையும் வீழ்ச்சியடைந்து பயணிகளின் வருகை மிகவும் மோசமான நிலைக்குத் தன்ளப்பட்ட போது, தற்போதைய ஜனாதிபதி உல்லாசப் பயணிகளின் வருகையை மேம்படுத்தி அபிவிருத்தி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளார்.

இறக்குமதியைக் குறைத்து விட்டு ஏற்றுமதித் துறையில் அதிக இலாபம் பெறுவதற்காக பொருளாதார திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கான பிரதிபலன்கள் இப்போதல்ல கிடைக்கும்! என்றும் அமைச்சர் இங்கு மேலும் உரையாற்றினார்.

கம்பஹா மாவட்டத்தில் திவுலப்பிட்டி தேர்தல் தொகுதியில் வெற்றிலை மாதிரி கிராமங்கள் இன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் சேதனப் பசளைகளைப் பயன்படுத்தி பயிரி அறுவடை செய்து தற்போது நல்ல விலையில் விற்பனை செய்யப்படுவதாக இராஜங்க அமைச்சர் தெரிவித்தார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் “சுபிட்சத்தின் நோக்கு” விஞ்ஞாபனத்தின் கொள்கையை வெற்றி காணும் நோக்கில் விவசாயிகளுக்கு அதி கூடிய விலை செலுத்தல் – பாவனையாளர்களுக்கு சலுகை விலை வழங்கும் திட்டத்தின் கீழ் விவசாயிகளின் மஞ்சள் அறுவடை விழாவின் போது கலந்து கொண்டு அமைச்சர் மேற்கண்டவாறு உரையாற்றினார்.

சோளம், மரமத்திரிகை, சுறுவர்,சுராம்வெற்றிலை ஆள்ளிட்ட சிறு பெருந்தோட்ட செய்கை மற்றும் அது சார்ந்த கைத்தொழில்கள் மற்றும் ஏற்றுமதி மேம்பாட்டு இராஜங்க அமைச்சர் ஜானக யக்கும்புரவின் தலைமையில் இடைபெற்றது.

கரும்பு, சோளம், மரமுந்திரிகை, கறுவா, கராம்பு, வெற்றிலை உள்ளிட்ட சிறு பெருந்தோட்டப் பயிர்கள் அபிவிருத்தி மற்றும் அது சார்ந்த கைத்தொழில்கள் மற்றும் ஏற்றுமதி மேம்பாட்டு இராஜாங்க ஏற்றுமதி விவசாயத் திணைக்களம் இத் திட்டத்தை நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தியுள்ளது. மசாலா சந்தைப்படுத்தல் சபை விவசாயிகளிடமிருந்து மஞ்சளை கொள்வளவு செய்கிறது.

இதனடிப்படையில் நிகழ்வின் போது கம்பஹா மாவட்டத்தின் திவுலப்பிட்டி தேர்தல் தொகுதியில் மஞ்சள் கிலோ ஒன்று 165 ரூபா படி அரசாங்கத்தினால் கொள்வனவு செய்யப்பட்டது. விவசாயிகளிடம் பெறப்பட்ட மஞ்சளுக்கு அன்றைய தினமே பணமும் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் திவுலப்பிட்டி பிரதேச சபை உறுப்பினர் தரங்க ஐயசிங்க, ஏற்றுமதி விவசாயத் திணைக்கள பணிப்பாளர் நாயகம் ஏ.பி.பி திஸ்னா, இலங்கை மசாலா சந்தைப்படுத்தல் சபை தலைவி குமுதினி, ஏற்றுமதி விவசாயத் திணைக்களத்தின் பணிப்பாளர் உபுல் ரணவீர திவுலப்பிட்டி. டபிள்யு டபிள்யு.எம் பி குமாரி மற்றும் அரச அதிகாரிகள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

Related posts

Leave a Comment