உள்நாடு 

சந்தேகத்துக்குரிய எரிவாயு கொள்கலன்களை மீள கையளிப்பதற்கு சந்தர்ப்பம்!

நுகர்வோரினால் பாவனைக்கு உட்படுத்தப்பட்ட, எரிவாயு தீர்ந்துபோகாத சமையல் எரிவாயு கொள்கலன்களை மீள கையளிக்க விரும்புவோருக்கு சந்தர்ப்பம் வழங்குமாறு லிட்ரோ மற்றும் லாஃப்ஸ் நிறுவனங்களுக்கு நுகர்வோர் விவகார அதிகார சபை அறிவித்துள்ளது.

இவ்வாறு மீளப் பெறும் சமையல் எரிவாயு கொள்கலன்களில் எஞ்சியுள்ள எரிவாயுவின் அளவை தற்போதைய சந்தை விலைக்கு ஏற்ப கணக்கிட்டு, அந்த தொகையை புதிய எரிவாயு கொள்கலனை கொள்வனவு செய்யும்போது, கழிப்பனவு செய்யுமாறு குறித்த நிறுவனங்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.இதேவேளை, சமையல் எரிவாயு விநியோகஸ்தர்கள் அல்லது முகவர்கள், குறித்த எரிவாயு கொள்கலன்களை மீள பெற்றுக்கொள்ள மறுத்தால் 1977 என்ற துரித எண்ணுக்கு முறைப்பாடு செய்யுமாறு நுகர்வோர் விவகார அதிகார சபை அறிவித்துள்ளது.

Related posts

Leave a Comment