Politics | அரசியல் மலையகம் 

விழா மேடையில் உதவி ஆசிரியர் நியமனம் குறித்துகல்வி அமைச்சரை உறுதியளிக்க வைத்த செந்தில் தொண்டமான்

உதவி ஆசிரியர்களுக்கான நியமனத்தை விரைவாக பெற்றுக்கொடுக்க நடவடிக்கையெடுக்கப்படுமென கல்வி அமைச்சர் தினேஸ் குணவர்தன, பிரதமரின் இணைப்புச் செயலாளர் செந்தில் தொண்டமானின் கோரிக்கைக்கு உறுதியளித்தார்.

ரக்குவானை சென். ஜோன்ஸ் பாடசாலை தேசியப் பாடசாலையாக மாற்றியமைக்கப்பட்டுள்ளமைக்கான ஆவணம் கல்வி அமைச்சர் தினேஸ் குணவர்தன,பிரதமரின் இணைப்புச் செயலாளர் செந்தில் தொண்டமான், பாராளுமன்ற உறுப்பினர் ஜோன் செனவிரட்ன, பிரியாந்தினி சொய்ஷா, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உதவி செயலாளர் ரூபன் பெருமாள் ஆகியோர் தலைமையில் பாடசாலை அதிபரிடம் கையளிக்கப்பட்டது.

கடந்தகாலத்தில் இந்தப் பாடசாலைக்கு 1 1/2ஏக்கர் காணியை செந்தில் தொண்டமான் பெற்றுக்கொடுத்திருந்ததுடன், 03 மாடி கட்டடம் ஒன்றையும் அமைப்பதற்கான நடவடிக்கையும் முன்னெடுத்துள்ளார்.

இந்நிகழ்வில் உரையாற்றிய செந்தில் தொண்டமான், அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் காலம் முதல் மறைந்த தலைவர் ஆறுமுகன் தொண்டமான் காலம் வரை இந்த பாடசாலையின் வளர்ச்சியில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸிற்கு பாரிய பங்களிப்பு உள்ளது எனவும், ரக்குவானை சென். ஜோன்ஸ் பாடசாலையை சுற்றியுள்ள 50 கி.மீ தூரத்துக்கு உட்பட்ட தோட்டப்புறங்களுக்கு இந்தப் பாடசாலையே பிரதான பாடசாலையாக காணப்பட்டதால் இ.தொ.கா இப்பாடசாலையின் அபிவிருத்தியில் தொடர்ச்சியாக கவனம் செலுத்தி வந்துள்ளது. எதிர்காலத்திலும் பாடசாலையின் வளர்ச்சியை முன்னெடுப்பதில் முன்னின்று செயல்படும்.

இப்பாடசாலையின் கல்வி வளர்ச்சிக்கும், மாணவர்கள் சிறந்த பெறுபேறுகளை பெறுவதில் தன்னை முழுமையாக அர்ப்பணிக்கும் அதிபர் ஆசிரியர்களுக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

2014ஆம் ஆண்டு அமரர் ஆறுமுகன் தொண்டமான் மற்றும் அப்போதைய கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன ஆகியோர் கூட்டு அமைச்சரவைப் பத்திரத்தின் ஊடாக முவ்வாயிரத்துக்கும் மேற்பட்ட உதவி ஆசிரியர் நியமன பத்திரங்களுக்கு அமைச்சரவை அனுமதி பெற்றிருந்தனர்.

கடந்தகாலத்தில் இவர்கள் பகுதிப்பகுதியாக உதவி ஆசிரியர் சேவைக்கு உள்வாங்கப்பட்டனர். என்றாலும் ஆசிரியர் சேவைக்கான தரத்தை பூர்த்தி செய்துள்ள பல உதவி ஆசிரியர்களுக்கு இன்னமும் நியமனம் வழங்கப்படாதுள்ளது. இப்பாடசாலையில் உள்ள உதவி ஆசிரியர்கள் உட்பட நியமனம் வழங்கப்படாதுள்ள உதவி ஆசிர

Related posts

Leave a Comment