உள்நாடு 

யாழில் மகாத்மா காந்தியின் 74ஆவது நினைவு தினம்

மகாத்மா காந்தியின் 74ஆவது நினைவு தினம் இன்றைய தினம் (ஞாயிற்றுக்கிழமை) யாழ்ப்பாணத்தில் நினைவுகூரப்பட்டது.

அகில இலங்கை காந்தி சேவா சங்கம் மற்றும் இந்திய துணை தூதரகத்தின் ஏற்பாட்டில் யாழ். போதனா வைத்தியசாலை முன்றலில் உள்ள மகாத்மா காந்தியின் உருவச்சிலை அமைந்துள்ள இடத்தில் இந்நிகழ்வு இடம்பெற்றது.

இதன்போது காந்தியின் உருவச்சிலைக்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

இதன்போது அகில இலங்கை காந்தி சேவா சங்கத்தின் அதிகாரபூர்வ வெளியீடான காந்தீயம் பத்திரிகை நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரனால் வெளியிடப்பட்டது.

இந்நிகழ்வில் இந்திய துணைத்தூதரக பதில் தூதர் ராம் மகேஷ், நாடாளுமன்ற உறுப்பினர்களான சித்தார்த்தன், சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் முன்னாள் மாகாண சபை உறுப்பினர்களான சிவாஜிலிங்கம், கஜதீபன், மாநகர ஆணையாளர் ஜெயசீலன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Related posts

Leave a Comment