Politics | அரசியல் 

குறிப்பிட்ட இந்த நேரத்தில் மட்டும் மின்வெட்டு வேண்டாம் – கல்வியமைச்சர் பணிப்புரை..

க.பொ.த உயர்தர பரீட்சையின் போது மின் தடைகளை ஏற்படுத்த வேண்டாம் என கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன சம்பந்தப்பட்ட திணைக்களங்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

2021ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை பெப்ரவரி 7ஆம் திகதி முதல் மார்ச் 5ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. ஹோமாகமவில் இன்று (30) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட போதே கல்வி அமைச்சர் இதனை தெரிவித்தார்.

மேலும், கோவிட் தொற்று காரணமாக பரீட்சைகளை நடத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும், தற்போது அதனை மாற்ற வேண்டிய அவசியமில்லை எனவும் கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

Related posts

Leave a Comment