உள்நாடு 

குறைந்த விலையில் கிடைக்கும் அரிசி

சதொச விற்பனை நிலையங்களில் ஒரு கிலோ சம்பா அரிசியினை 128 ரூபாவிற்கு பெற்றுக்கொள்ள முடியும் என வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

புறக்கோட்டையில் அரிசி மொத்த வியாபாரிகளை அமைச்சர் ஆய்வு செய்தார். இதன் போது அமைச்சர் வர்த்தகர்களுடன் கலந்துரையாடினார். சம்பா அரிசி ரூ.100, நாட்டரிசி ரூ.105, பச்சை அரிசி ரூ.115க்கு கிடைக்கும் என வியாபாரிகள் தெரிவித்தனர்.

இந்த அரிசியை சதொச விற்பனை நிலையங்களுக்கு விநியோகிக்குமாறும், ஒரு நுகர்வோருக்கு 128 ரூபா என்ற அடிப்படையில் பத்து கிலோ அரிசியை வழங்குமாறும் அமைச்சர் அதிகாரிகளுக்கு விரைவில் பணிப்புரை வழங்கினார்.

Related posts

Leave a Comment