உள்நாடு 

கொழும்பில் பெண்ணுடன் சிக்கிய பௌத்த பிக்கு – மக்களிடம் சிக்கியதால் பரபரப்பு

கொழும்பு, நுகேகொடை பிரதேசத்தில் உள்ள பௌத்த விகாரை ஒன்றின் பிக்கு ஒருவர் பெண்ணுடன் சாதாரண உடையில் வாகனத்தில் இருந்த போது விகாரைக்கு பங்களிப்பு செய்யும் மக்களிடம் சிக்கியுள்ளார்.

இந்த சம்பவம் நேற்று நடந்துள்ளதுடன் இது தொடர்பான காணொளி சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

அப்போது அங்கிருந்தவர்கள் பிக்குவை தாக்க முயற்சித்துள்ளனர். எனினும் அவர் பிக்கு என்பதால் தாக்க வேண்டாம் என அருகில் இருந்த ஏனையோர் கூறுகின்றனர். பிக்கு என்பதால் தாக்க மாட்டோம் என அவர்கள் கூறுகின்றனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு பொலிஸார் சென்றதுடன் பிக்குவையும் வாகனத்தில் இருந்த பெண்ணையும் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

பிக்கு கெமராவில் தனது முகம் தெரியாதபடி கைகளால் முகத்தை மூடிக்கொண்டதுடன் பின்னர் தனது சட்டையால் முகத்தை மூடும் காட்சிகளையும் காணொளியில் காண முடிகிறது.

இந்த பௌத்த பிக்குவிடம் பிக்கு அடையாள அட்டையும் சாதாரண நபர்களுக்கான தேசிய அடையாள அட்டையும் இருப்பதாக அங்கிருந்தவர்கள் கூறுவதை கேட்கக் கூடியதாக இருந்தது. இவர் போன்ற பிக்குகளே பௌத்த சாசனத்திற்கு இழுக்கை ஏற்படுத்துவதாகவும் அங்கிருந்தவர்கள் தெரிவிக்கின்றனர்.   

Related posts

Leave a Comment