உள்நாடு 

14 புகையிரத சேவைகள் ரத்து…

சில புகையிரத மார்க்கங்களின் 14 புகையிரத சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி கட்டுப்பாட்டாளர்கள் பலருக்கு கொவிட்-19 தொற்று உறுதியாகியுள்ளதால் இவ்வாறு புகையிரத சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

அதற்கமைய , பிரதான புகையிரத மார்க்கத்தின் 6 புகையிரத சேவைகளும், களனி வெளி மற்றும் கரையோர புகையிரத மார்க்கங்களின் தலா 2 புகையிரத சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

மேலும் அத்துடன், புத்தளம் புகையிரத மார்க்கத்தின் 3 ரயில் சேவைகளும், வடக்கிற்கான ஒரு புகையிரத சேவையும் இவ்வாறு ரத்து செய்யப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

Related posts

Leave a Comment