Latest | சமீபத்தியது Sport | விளையாட்டு 

T20 கிரிக்கெட்டில் புதிய சாதனை…

T20 கிரிக்கெட்டில் அதிக சர்வதேச ஆட்டங்களில் விளையாடிய வீரர் என்கிற சாதனையை இந்திய அணி தலைவர் ரோஹித் சர்மா நிகழ்த்தியுள்ளார். இலங்கைக்கு எதிரான T20 தொடரை 3 – 0 என இந்திய அணி முழுமையாக வென்றுள்ளது. தரம்சாலாவில் நடைபெற்ற 3 வது ஆட்டத்தை இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. நாணய சுழற்சியை வென்ற இலங்கை அணி துடுப்பாட்டத்தை தேர்வு செய்து 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 146 ஓட்டங்கள் எடுத்தது. தலைவர் தசுன் ஷனகா 38 பந்துகளில் 2 சிக்ஸர்கள், 9 பவுண்டரிகளுடன் 74 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அவேஷ் கான் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்திய அணி 16.5 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 148 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஷ்ரேயஸ் ஐயர் 45 பந்துகளில் 73…

Read More
Latest | சமீபத்தியது Sport | விளையாட்டு 

இலங்கை அணியினர் பயணிக்கவிருந்த பேருந்தில் வெற்று தோட்டாக்கள்…

இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கைக் குழுவினர் புறப்படவிருந்த பேருந்தில் இருந்து இரண்டு வெற்று தோட்டாக்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கை அணி டெஸ்ட் தொடருக்காக பயணிக்கவிருந்த பேருந்தில் இருந்து குறித்த வெற்று தோட்டக்கள் மீட்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அணியினர் பேருந்தில் ஏறுவதற்கு முன் மேற்கொண்ட சோதனையின் போது குறித்த வெற்று தோட்டக்கள் மீட்கப்பட்டுள்ளது. இதேவேளை, சம்பவம் தொடர்பில் பேருந்தின் சாரதியிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளதாக இந்திய ஊடகம் மேலும் தெரிவித்துள்ளது.

Read More
Latest | சமீபத்தியது Politics | அரசியல் உள்நாடு 

மன்னிப்பு கோர மாட்டேன் – ரஞ்சன் ராமநாயக்க

மன்னிப்பு கோர மாட்டேன் என நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டு சிறை தண்டனை அனுபவித்து வரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார். சிறப்பு ஜனாதிபதி ஆணைக்குழுவில் இன்று சாட்சியமளிக்க அழைத்து வரப்பட்டிருந்த ரஞ்சன் ராமநாயக்க, சாட்சியமளித்து விட்டு வெளியேறும் போது ஊடகவியலாளர்களை பார்த்து இதனை கூறியுள்ளார். ஜனாதிபதியின் பொது மன்னிப்பு கிடைக்குமா, நீங்கள் அதனை எதிர்பார்க்கின்றீர்களா என செய்தியாளர்கள் சிறைச்சாலை பேருந்தில் இருக்கும் ரஞ்சன் ராமநாயக்கவிடம் கேட்டனர். அதற்கு தெரியவில்லை என தலையை அசைத்தும் கைகளை விரித்தும் பதிலளித்துடன் மன்னிப்பு கோர மாட்டேன் எனக் கூறினார். முன்னதாக பேருந்தில் ஏறும் போது நலமாக இருக்கின்றீர்களாக என ஊடகவியலாளர் ரஞ்சனிடம் கேட்டனர். நலமாக இருக்கின்றேன், நீங்கள் நலமா எனக் கேட்டார். அத்துடன் தன்னால் பேச முடியாது , பேசுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது எனவும் கூறினார்.…

Read More
Latest | சமீபத்தியது உள்நாடு 

சதொச விற்பனை நிலையங்களினூடாக சலுகை விலைக்கு மஞ்சள் தூள்…

சதொச விற்பனை நிலையங்களினூடாக இன்று (28) முதல் சலுகை விலைக்கு மஞ்சள் தூள் வழங்கக்கூடிய வகையில் வேலைத்திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்தவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர தெரிவித்துள்ளார். அதன்படி, நுகர்வோருக்கு ஒரு கிலோகிராம் மஞ்சள் தூளை ரூ.2,400க்கு சதொச விற்பனை நிலையங்களினூடாக கொள்வனவு செய்ய முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Read More
Latest | சமீபத்தியது உள்நாடு 

அதிகாரமளிக்கப்படாத வெளிநாட்டு நாணய வணிகம் – மத்திய வங்கியின் அறிக்கை

அதிகாரமளிக்கப்படாத வெளிநாட்டு நாணய வணிகம் பற்றிய தகவல்களை வழங்குமாறு இலங்கை மத்திய வங்கி பொதுமக்களைக் கோருகின்றது. இலங்கையில் வெளிநாட்டு நாணயங்களைக் கொள்வனவு செய்வதற்கான, விற்பனைசெய்வதற்கான, பரிமாற்றம்செய்வதற்கான அனுமதி, அதிகாரமளிக்கப்பட்ட வணிகர்களுக்கும் (அதாவது உரிமம்பெற்ற வங்கிகள்) இலங்கை மத்திய வங்கியினால் நியமிக்கப்பட்ட நாணய மாற்றுநர்களுக்கும் மாத்திரம் வழங்கப்பட்டுள்ளது. ஆகையினால், வெளிநாட்டு நாணயத்தின் கொள்வனவு, விற்பனை அல்லது பரிமாற்றம் என்பன அதிகாரமளிக்கப்பட்ட வணிகர் ஒருவர் ஊடாக அல்லது அதிகாரமளிக்கப்பட்ட நாணய மாற்றுநர் ஊடாக மாத்திரமே மேற்கொள்ளப்படல் வேண்டும். 2017ஆம் ஆண்டின் 12ஆம் இலக்க வெளிநாட்டுச் செலாவணிச் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் எவரேனும் ஆள், நிறுவனம், அல்லது ஏதேனும் வேறு அமைப்பு இலங்கை மத்திய வங்கியின் அனுமதியின்றி வெளிநாட்டு நாணயக் கொடுக்கல்வாங்கல்களில் ஈடுபடுவது சட்டத்திற்கு புறம்பான நடவடிக்கையொன்றாகும். எனவே, அதிகாரமளிக்கப்படாத எவரேனும் ஆள், நிறுவனம் அல்லது ஏதேனும் அமைப்பு வெளிநாட்டு நாணய…

Read More
Latest | சமீபத்தியது உள்நாடு 

பாப்பரசரை சந்தித்தார் பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித்

வத்திக்கானுக்கு விஜயம் செய்துள்ள பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை இன்று (28) திருத்தந்தை பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸினை சந்தித்து பேசியுள்ளார். இந்த சந்திப்பு வத்திக்கான் நகரின் புனித பீட்டர் சதுக்கத்தில் காலை 11.00 மணிக்கு நடைபெற்றுள்ளது. உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகள் குறித்து பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெளிவுபடுத்தி இருப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Read More
Latest | சமீபத்தியது மலையகம் 

நுவரெலியா எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் தட்டுப்பாடு!

-சாரதிகள் பெரும் அவதி- ( நுவரெலியாவில் இன்று காலை முதல் டீசல் எரிபொருளுக்குத் தட்டுப்பாடு நிலவி வருகிறது.நானுஓயா எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பெற்றோல் மாத்திரம் விநியோகம் செய்தமையும் குறிப்பிடத்தக்கது. பெட்ரோல், டீசல் விலை உயர்வின் பின்னும் தேவைக்கேற்ற விநியோகம் இல்லை என வாகனச் சாரதிகள் விசனம் தெரிவிக்கின்றனர். ஒவ்வொரு வாகனச் சாரதியும் எரிபொருள் நிரப்புவதற்காக முண்டியடித்துக் கொண்டு வாகனங்களைக் கொண்டு செல்ல முற்பட்டதன் காரணமாக நுவரெலியா – பதுளை பிரதான வீதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு முன்னால் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது . எரிபொருள் தட்டுப்பாடு காரணமாகவும் நகரில் நிலவும் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தவும் நுவரெலியா – பதுளை பிரதான வீதியை ஒருவழிப்பாதையாக மாற்றியுள்ளனர். வாகனச் சாரதிகள் மாற்று வீதிகளைப் பயன்படுத்துமாறும் நுவரெலியா போக்குவரத்து பொலிஸார் அறிவுறுத்தி வருகின்றனர்.அத்துடன் வாகனச் சாரதிகள் நீண்ட தூரம்…

Read More
Latest | சமீபத்தியது World | உலகம் 

ஐ.நா. பொதுச்சபை அவசரக் கூட்டம்….

ஐ.நா. பொதுச் சபை அவசக் கூட்டத்தைக் கூட்டும் நிமித்தமாக பாதுகாப்பு பேரவையின் சார்பில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. ஐ.நா பாதுகாப்பு பேரவையின் உறுப்பு நாடுகளில் 11 நாடுகள் வாக்களித்தன.ரஷ்யா உறுப்பு நாடாக இருந்தாலும் அதற்கு எதிரான தீர்மானம் என்பதால் எதிர்த்து வாக்களித்தது. இந்தியா, சீனா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகள் வாக்களிக்கவில்லை. 1950 ஆம் ஆண்டுக்குப் பின்னர் ஐ.நா பொதுச்சபை அவசரக் கூட்டத்துக்காக 11 ஆவது முறையாக வாக்கெடுப்பு நடந்துள்ளது. ஐ.நா பொதுச்சபையில் 193 உறுப்பு நாடுகள் உள்ளன. இந்த உறுப்புநாடுகள் கூடி நிலைமையை பற்றி விவாதிக்கவே இந்த வாக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. ஏற்கெனவே கடந்த 26 ஆம் திகதி, உக்ரேன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ள நிலையில், ஐ.நா பாதுகாப்பு பேரவை, ரஷ்யாவுக்கு எதிராக தீர்மானம் கொண்டு வரப்பட்டது. உக்ரைனில் இருந்து ரஷ்ய படைகள் உடனடியாக நிபந்தனையின்றி…

Read More
Jafna | யாழ்ப்பாணம் Latest | சமீபத்தியது உள்நாடு 

யாழ். பல்கலையின் 35 ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா….

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் 35 ஆவது பொதுப் பட்டமளிப்பு விழாவின் இரண்டாவது பகுதி, எதிர்வரும் மார்ச் மாதம் 03ஆம், 04ஆம், 05ஆம் திகதிகளில், பல்கலைக்கழக உள்ளக விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது. முதல் இரண்டு நாள்களும் தலா மூன்று அமர்வுகளும், மூன்றாம் நாள் இரண்டு அமர்வுகளுமாக இடம்பெறவுள்ள இந்தப் பட்டமளிப்பு விழாவில் 2 ஆயிரத்து 619 பேர் பட்டங்களைப் பெறுகின்றனர். இது தொடர்பில் ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் நிகழ்வு ஒன்று இன்று காலை 10 மணியளவில் யாழ். பல்கலைக்கழக சபா மண்டபத்தில் துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா தலைமையில் இடம்பெற்றது. இந்தச் சந்திப்பில் பல்கலைக்கழகப் பதிவாளர் வி. காண்டீபன், கல்வி மற்றும் ஆராய்சி வெளியீடுகள் பிரிவின் உதவிப் பதிவாளர் எஸ். கே. பிரபாகரன் ஆகியோர் கலந்துகொண்டனர். இதன்போது ஊடகங்களுக்கான ஊடக விபரிப்பை கலைப்பீடத்தின் பீடாதிபதியும், பட்டமளிப்பு விழாக் குழுவின் தலைவருமான பேராசிரியர் கே.…

Read More
Latest | சமீபத்தியது உள்நாடு 

மேலும் 32 கொரோனா மரணங்கள் பதிவு….

கொரோனா தொற்றுக்கு உள்ளாகி நேற்றையதினம் மேலும் 32 பேர் உயிரிழந்துள்ளனர் என அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. 16 ஆண்களும் 16 பெண்களும் உயிரிழந்துள்ளனர் என்பதுடன், கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 16,222 ஆக அதிகரித்துள்ளது. 60 வயதுக்கு மேற்பட்டவர்களில் 24 பேரும் 30 வயதுக்கும் 59 வயதுக்கும் இடைப்பட்டவர்களில் 06 பேரும் 30 வயதுக்குக் கீழ் 02 பேரும் மரணித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Read More