Latest | சமீபத்தியது உள்நாடு 

இடுகம கொவிட் நிதியத்தை மேம்படுத்துவதற்கு அனுமதி பெற்ற வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலைய கழகத்தினால் கௌரவ பிரதமருக்கு 6 மில்லியன் ரூபாய் வழங்கிவைப்பு-!

இடுகம கொவிட்-19 சுகாதார மற்றும் சமூக பாதுகாப்பு நிதியத்தை மேம்படுத்துவதற்கு அனுமதி பெற்ற வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலைய கழகத்தினால் ஆறு மில்லியன் ரூபாய் பெறுமதியான காசோலை நேற்று (31) அலரி மாளிகையில் வைத்து கௌரவ பிரதமருக்கு வழங்கிவைக்கப்பட்டது.

நாட்டில் கொவிட் தொற்றை இல்லாதொழிப்பதற்கு அரசாங்கம் முன்னெடுத்து செல்லும் வேலைத்திட்டம் மற்றும் துரித தடுப்பூசி செயற்பாடு ஆகியன வெளிநாடுகளில் பாராட்டிற்கு உட்பட்டுள்ளதாக இதன்போது தெரிவிக்கப்பட்டது.

அதனால் இலங்கை தொழிலாளர்களுக்கு தொழில் வழங்குவதற்கு வெளிநாடுகள் ஆர்வம் காட்டுவதாக அனுமதி பெற்ற வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலைய கழக அதிகாரிகள் கௌரவ பிரதமர் மத்தியில் தெரிவித்தனர்.

கொவிட்-19 தொற்றை கட்டுப்படுத்தும் அரசாங்கத்தின் முயற்சிகளை வலுப்படுத்தும் அனுமதி பெற்ற வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலைய கழகத்தின் செயற்பாடுகளுக்கு கௌரவ பிரதமர் இதன்போது நன்றி தெரிவித்தார்.

குறித்த சந்தர்ப்பத்தில் வெளிநாட்டு தொழில்வாய்ப்பு மேம்பாடு மற்றும் சந்தை பல்வகைப்படுத்தல் இராஜாங்க அமைச்சர் கௌரவ பிரியங்கர ஜயரத்ன, பிரதமரின் செயலாளர் திரு.அனுர திசாநாயக்க, பிரதமரின் மேலதிக செயலாளர் சட்டத்தரணி திரு.சமிந்த குலரத்ன, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலைவர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் மஹிந்த ஹதுருசிங்க, அனுமதி பெற்ற வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலைய கழகத்தின் தலைவர் ஃபாருஸ் மரிக்கார், செயலாளர் எம்.எஃப்.எம்.அர்ஷாட் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related posts

Leave a Comment