Latest | சமீபத்தியது உள்நாடு 

எதிர்வரும் காலங்களில் சந்தையில் காகிதங்களுக்கான பற்றாக்குறை அதிகரிக்கும் சாத்தியம்

எதிர்வரும் பெப்ரவரி மாததிற்குப் பின்னர் சந்தையில் காகிதத்திற்கான பற்றாக்குறை அதிகரிக்குமென காகித கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

சந்தைக்குத் தேவையான காகிதத்தினை இறக்குமதி செய்வதற்கு டொலர்கள் இல்லாமை காரணமாக இவ்வாறு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக காகித கூட்டுத்தாபனத்தின் தலைவர் விமல் ரூபசிங்க தெரிவித்துள்ளார்.

பல்வேறு வர்த்தக நோக்கங்களுக்காக மாதாந்தம் ஒரு இலட்சத்து 20 ஆயிரம்டொன் காகிதம் நாட்டுக்கு இறக்குமதி செய்யப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இருப்பினும் கடந்த சில மாதங்களாக இந்தஅளவு குறைவடைந்து வருவதாகவும் காகித கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், அலுவலக தேவைகளுக்காக காகிதங்கள் மற்றும் பத்திரிகைகள் பிரசுரத்திற்கான காகிதங்கள் தொடர்ந்தும் குறைவடைந்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச சந்தையில் காகிதத்திற்கான பற்றாக்குறை நிலவிவரும் நிலையில், இந்த நிலைமை நீடிக்குமாயின்காகிதத்தின் விலை அதிகரிக்கும் சாத்தியம்காணப்படுவதாகவும் காகித கூட்டுத்தாபனத்தின் தலைவர் விமல் ரூபசிங்க மேலும் தெரிவித்துள்ளார்

Related posts

Leave a Comment