Latest | சமீபத்தியது 

மாகும்புரவிலிருந்து 25 முக்கிய நகரங்களுக்கு நீண்டதூர சொகுசு பஸ் சேவை…

கொட்டாவ – மாகும்புர போக்குவரத்து நிலையத்திலிருந்து 25 முக்கிய நகரங்களுக்கு நீண்டதூர சொகுசு பஸ் சேவை இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது.

இதன்படி , சுமார் 72 சொகுசு மற்றும் அதி சொகுசு பஸ்களை சேவையில் ஈடுபடுத்த திட்டமிட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இந்த பஸ் சேவை முல்லைத்தீவு, அக்கரைப்பற்று, மட்டக்களப்பு, எம்பிலிப்பிட்டி மற்றும் மொனராகலை ஆகிய பகுதிகள் வரை முன்னெடுக்கப்படும்.

மேலும் ,அதிவேக நெடுஞ்சாலைகள் மற்றும் சாதாரண வீதிகள் ஆகிய இரண்டிலும் பஸ்கள் இயக்கப்படும் என்றும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு (NTC) தெரிவித்துள்ளது.

Related posts

Leave a Comment