வரவிருக்கும்“Long weekend” – விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை…
வரவிருக்கும் நீண்ட வார இறுதியில் பொதுமக்கள் நெரிசலான பகுதிகளுக்குச் செல்லும் போது தொடர்ந்து கவனமாக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
அதன்படி ,இந்த காலக்கட்டத்தில் கொவிட் சுகாதார வழிகாட்டுதல்களை கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும் என சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் டாக்டர் ஹேமந்த ஹேரத் பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்தார்.
இதற்கமைய வார இறுதி நீண்ட நாட்கள் விடுமுறையை முன்னிட்டு பலர் மீண்டும் பயணத்தைத் ஆரம்பித்துள்ளனர். அவ்வாறு பயணங்களை மேற்கொள்வோர் நெரிசல் குறைவான இடங்களுக்குச் செல்லவும் எச்சரிக்கையாக இருக்கவும் கேட்டுக் கொண்டார்.
மேலும் நாட்டில் சுமார், 15 மில்லியன் மக்கள் கொவிட் தடுப்பூசியின் இரண்டு டோஸ்களை பெற்றிருந்தாலும், பலர் இன்னும் மூன்றாவது பூஸ்டர் டோஸைப் பெறவில்லை என்றும் டாக்டர் ஹேரத் சுட்டிக்காட்டினார்.