Latest | சமீபத்தியது 

வெல்லம்பிட்டிய சாலமுல்ல பிரதேசத்தில் துப்பாக்கிச் சூடு…

வெல்லம்பிட்டிய, சாலமுல்ல கமகேவத்த பிரதேசத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவரினால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் பல குற்றச்செயல்களுடன் தொடர்புடைய நபர் ஒருவர் பலத்த காயங்களுடன் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

படுகாயமடைந்தவர் ஹங்வெல்ல பிரதேசத்தை சேர்ந்த 33 வயதுடையவர் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.

இதன்படி ,காயமடைந்த நபர் மற்றுமொரு பெண்ணுடன் முச்சக்கர வண்டியில் கமகேவத்தை நோக்கி பயணித்த போது துப்பாக்கிச் சூடு இடம்பெற்றதாக பொலிஸார் மேலும் தெரிவித்தார்.

Related posts

Leave a Comment