Latest | சமீபத்தியது உள்நாடு 

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் – காத்தான்குடியில் கைது செய்யப்பட்ட 64 பேருக்கும் விளக்கமறியல் நீடிப்பு…

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பாக காத்தான்குடி பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட ஸஹ்ரானின் பயிற்சி முகாமில் பயற்சிபெற்ற மற்றும் அவருடன் தொடர்பை பேணிவந்த 60 பேரையும் எதிர்வரும் 15ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ.சி.எம்.றிஸ்வான் காணொளி மூலமாக இன்று புதன்கிழமை (02) உத்தரவிட்டார்.

கடந்த (21.4.2019) உயிர்த்த ஞாயிறன்று இடம்பெற்ற தாக்குதலின் பின்னர்; ஸஹ்ரான் குழுவோடு தொடர்புடையவர்கள் என்றும் இவர்கள் ஹம்பாந்தோட்டை மற்றும் நுவரேலியா போன்ற இடங்களுக்கு பயிற்சிக்காக சென்றார்கள் என்ற சந்தேகத்தில், காத்தான்குடியை சேர்ந்த 65 பேரை கைது செய்தனர்.

அதேவேளை ஸஹ்ரானின் சகோதரி மற்றும் அவரின் கணவர், உட்பட 4 பேரை மட்டக்களப்பு பொலிசார் கைது செய்தனர். இரு வெவ்வேறு வழக்குகளை கொண்ட 69 பேர் பேர் தொடர்ந்து விளக்கமறியல் வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் 5 பேர் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டதையடுத்து 64 பேர் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் குறித்த வெவ்வேறு இரு வழக்குகளை கொண்ட 64 பேரும் பொலன்னறுவை, அனுதாரபுரம், கேகாலை, திருகோணமலை, ஆகிய சிறைச்சாலைகளில் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

இந்த நிலையில் இன்று மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ.சி.எம்.றிஸ்வான் முன்னிலையில் இந்த வழக்குகள் வழுக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டபோது தற்போது தனிமைப்படுத்தப்பட்ட ஊரடங்கு சட்டம் காரணமாக நீதிமன்றிற்கு இவர்களை அழைத்துவர முடியாததையடுத்து அவர்களை காணொளி மூலமாக எதிர்வரும் 15 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் ஏ.சி.எம்.றிஸ்வான் உத்தரவிட்டார்.

Related posts

Leave a Comment