பஸ் முறைக்கேடுகள் குறித்த அறிவிக்க புதிய இலக்கம் அறிமுகம்….
போக்குவரத்து விதிமீறல்கள் உள்ளிட்ட சட்ட விரோத செயல்களில் ஈடுபடும் மாகண பஸ் ஊழியர்களுக்கு எதிராக வீடியோக்களை பதிவு செய்து அனுப்புவதற்கான 071-2595555 எனும் புதிய இலக்கம் ஒன்றை போக்குவரத்து ஆணைக்குழு அறிமுகப்படுத்தியுள்ளது.
சமூக வலைத்தளங்களான வட்ஸ் அப், வைபர் மற்றும் இமோ மூலம் அந்த எண்ணுக்கு போக்குவரத்து விதிமீறல்கள் உள்ளிட்ட சட்ட விரோத செயல்களில் ஈடுபடும் மாகண பஸ் ஊழியர்களுக்கு எதிராக காட்சிகளை பதிவு செய்து அனுப்புவதன் மூலம் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியுமென தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளரும் பேராசிரியருமான திலான் மிராண்டா தெரிவித்தார்.
மேலும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தொடர்பு இலக்க எண் 1955 தொடர்ந்து செயற்பாட்டில் இருப்பதாகவும் 071-2595555 எனும் புதிய எண் பொது மக்களுக்கு மேலும் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையிலும் அறிமுகப்படுத்தியுள்ளதாக பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.