உள்நாடு 

இராஜாங்க அமைச்சரின் மகன் பொலிஸ் நிலையத்தில் சரண்…

இராஜாங்க அமைச்சர் அருந்திக்க பெர்னாண்டோவின் மகன் ராகம பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார் என்று அறிக்கை ஒன்றை வெளியிட்டு பொலிஸ் ஊடகப்பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது,

இதன்படி ,ராகமயில் அமைந்துள்ள, களனி பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் மாணவர்கள் மீதான தாக்குதல் சம்பவம் தொடர்பில் அவர் ராகம பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் இதேவேளை, மருத்துவ பீடத்தின் மாணவர்கள் மீதான தாக்குதல் சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட 6 பேரில் ஐவர் இன்று வரை விளக்கமறியில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

Leave a Comment