எந்த தேர்தலையும் சந்திக்க தயார்…
சட்டம் அனுமதிக்கும் எந்தவொரு தேர்தலுக்கும் செல்வதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) தயாராக இருப்பதாக நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அதன்படி இந்த விடயம் குறித்து ஊடகங்களுக்கு தெரிவித்த அவர், இது தனது தனிப்பட்ட மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கருத்து என்றும் கூறியுள்ளார்.
அரசியலமைப்பின் பிரகாரம் பொதுத் தேர்தலையோ அல்லது ஜனாதிபதித் தேர்தலையோ நடத்துவது சாத்தியமில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் ,உள்ளூராட்சித் தேர்தலே நடத்தக்கூடிய ஒரே தேர்தல் என்றும் தமது கட்சியின் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவும் தேர்தலுக்கு செல்வதையே விரும்புகின்றார் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.