உள்நாடு 

களனிதிஸ்ஸ மின்னுற்பத்தி நிலையம் செயலிழந்தது…

களனிதிஸ்ஸ மின்னுற்பத்தி நிலையத்தின் செயற்பாடுகள் நிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி ,குறித்த மின் நிலையத்தில் எரிபொருள் தீர்ந்து போனதை அடுத்து இரண்டு மின்பிறப்பாக்கிகள் நேற்று இரவு முற்றாக செயலிழந்துள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

மேலும் ,டீசல் தட்டுப்பாடு காரணமாக களனிதிஸ்ஸ அனல்மின் நிலையம் மற்றும் களனிதிஸ்ஸ ஒருங்கிணைந்த சுழற்சி மின் நிலையம் ஆகியவை நிறுத்தப்பட்டுள்ளதாகவும் அந்த சபை மேலும் தெரிவித்துள்ளது.

இதேவேளை டீசல் கையிருப்பில் இல்லாததால் மத்துகம CEB ஆலையும் நேற்று இரவு வலுக்கட்டாயமாக மூடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

Leave a Comment