74 ஆவது சுதந்திர தின நிகழ்வுக்கான இறுதி ஒத்திகை நிகழ்வு இன்று…..
74 ஆவது சுதந்திர தின நிகழ்வினை நாளை சுதந்திர சதுக்கத்தில் நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ள நிலையில், உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்ஷ இறுதி ஒத்திகை நிகழ்வுகளை இன்று கண்காணித்தார்.
இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் ‘சவால்களை முறியடிக்கும் வளமான தாய்நாடு’ என்ற தொனிப்பொருளில் இவ்வருட தேசிய சுதந்திர தின நிகழ்வுகள் நாளை நடைபெறவுள்ளது.
பெருமைக்குரிய சுதந்திர தின நிகழ்வின் இறுதி ஒத்திகையை அவதானிப்பில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் நாயகம் கமல் குணரத்ன, முப்படைகளின் தளபதிகள் மற்றும் பாதுகாப்பு படைகளின் தலைவர்கள் கலந்துகொண்டனர்.