வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் சென்ற வாகனத்தை தாக்கிய காட்டு யானை….
பொலன்நறுவை -ஹபரணை பிரதான வீதியில் இரண்டு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளான கணவன், மனைவியை ஏற்றிச் சென்ற வாகனத்தை காட்டு யானை தாக்கியுள்ளது. வீதியில் இருந்தவாறு யானை ஒன்றை புகைப்படம் எடுக்க முயற்சித்த போது, அங்கு வந்த யானை, வாகனத்தை தாக்கியுள்ளதுடன் அதனை வீதியை விட்டு தள்ளியுள்ளது.
யானை தாக்கியதில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. வாகனத்திற்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக மின்னேரிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.