எங்களால் ஒருபோதும் பகிடிவதையை அனுமதிக்க முடியாது
எங்களால் ஒருபோதும் பகிடிவதையை அனுமதிக்க முடியாது என இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச (Namal Rajapaksa) தெரிவித்துள்ளார்.
அமைச்சரின் மகனாகயிருந்தாலும் சரி சாதாரண பிரஜையின் மகனாகயிருந்தாலும் சரி அவருக்கு எதிராக ஒரே நாடு ஒரே சட்டத்தின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் மக்கள் இதனையே அரசதலைவரிடம் இருந்து எதிர்பார்க்கின்றனர் என குறிப்பிட்டுள்ளார்.
ராகமமருத்துவ பீட மாணவர்கள் தாக்கப்பட்டமை தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் அருந்திக பெர்ணான்டோவின் மகனிற்கு எதிராக நடவடிக்கை எடுக்காமலிருப்பதற்கான காரணங்கள் எதுவும் இல்லை என தெரிவித்துள்ளார்.