Sport | விளையாட்டு World | உலகம் 

சீனாவில் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் ஆரம்பம்!

பெரும் எதிர்பார்ப்பு மற்றும் எதிர்ப்புக்கு மத்தியில் சீனாவில் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் இன்று (வெள்ளிக்கிழமை) ஆரம்பமாகின.

இலங்கை நேரப்படி மாலை 5.30 மணிக்கு தொடக்க விழா ஆரம்பமானது. இதனைத்தொடர்ந்து போட்டிகள் நடைபெறுகின்றன.

இறுக்கமான கொவிட்-19 கட்டுப்பாடுகள், மனித உரிமை மீறல்கள் மற்றும் புறக்கணிப்பு குற்றச்சாட்டுகள் மீதான அரசியல் பதற்றங்களுக்கு மத்தியில் சீனாவில் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறுகின்றன.முன்னதாக அமெரிக்கா, பிரித்தானியா, கனடா மற்றும் அவுஸ்ரேலியா ஆகிய நாடுகள், சீனாவின் மனித உரிமைகள் பதிவு குறித்த கவலைகள் காரணமாக குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுகளுக்கு அரசாங்கப் பிரதிநிதிகளை அனுப்பப் போவதில்லை என கூறி புறக்கணித்திருந்தன.

Related posts

Leave a Comment