Sport | விளையாட்டு 

ஜூனியர் உலக கோப்பை: இந்தியா இங்கிலாந்து இன்று மோதல்!

ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட்டின் இறுதி போட்டியில் இந்தியா – இங்கிலாந்து அணிகள் இன்று மோதுகிறது.

14-வது ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி (19வயதுக்குட்பட்டோர்) வெஸ்ட் இன்டீசில் நடந்து வருகிறது.

16 அணிகள் பங்கேற்ற இப்போட்டி தொடர் அரைஇறுதிக்கு இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் தகுதி பெற்றன.

நடப்பு சாம்பியன் வங்காளதேசம், தென்ஆப்பிரிக்கா, இலங்கை, பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ், ஜிம்பாப்வே, ஸ்காட்லாந்து, அயர்லாந்து, கனடா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், உகாண்டா, பப்புவா, நியூ கினியா ஆகிய அணிகள் வெளியேற்றப்பட்டன.

முதல் அரை இறுதியில் ஆப்கானிஸ்தானை 15 ரன் வித்தியாசத்தில் இங்கிலாந்து வீழ்த்தியது. நேற்று முன்தினம் நடந்த 2-வது அரை இறுதியில் இந்திய அணி 96 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை தோற் கடித்து இறுதி போட்டிக்கு முன்னேறியது.

இந்திய அணி தொடர்ந்து 4-வது முறையாக இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது. ஒட்டு மொத்தமாக 8-வது முறையாக இறுதிப் போட்டிக்குள் (2000, 2006, 2008,2012, 2016, 2018,2020) நுழைந்தது.

Related posts

Leave a Comment