Latest | சமீபத்தியது மலையகம் 

நோர்வூட் பிரதேச சபையிக்கு உட்பட்ட பிரதேசங்களில் பல அபிவிருத்தி திட்டங்கள்!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் ‘சுபீட்சத்தின் நோக்கு’ வேலைத்திட்டத்தின் கீழ், நாடு முழுவதிலுள்ள கிராம சேவகர் பிரிவுகளில் நேற்று புதிய அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் சுபநேரத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டன.

மக்களின் பொருளாதாரத்தினை உயர்த்துவதற்காக 2022 அண்டு வரவு செலவு திட்டத்தில் கொண்டு வரப்பட்ட கிராமத்திற்கான ஒரு லட்சம் வேலைத்திட்டம் எனும் தொனிப்பொருளில் நாடாளவிய ரீதியில் நேற்று (03) காலை 8.52 இற்கு நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டன.

இவ் வேலைத்திட்டம் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் மற்றும் அம்பகமுவ அபிவிருத்தி குழுத்தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ராமேஸ்வரன் ஆகியோரின் வழிகாட்டலில் மலையகத்தில் தோட்டம் மற்றும் கிராம புறங்களிலும் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன.

இந்நிகழ்வில் நோர்வூட் பிரதேச சபையிக்கு உட்பட்ட குடாகம, அட்டன் வடக்கு, டிக்கோய, வணராஜா,மனிக்கவத்த,பட்டல்கல,சிங்காரவத்த,பொகவந்தலாவ, கொட்டியாகல மற்றும் கில்லானி பகுதிகளில் கடந்த காலத்தில் கிராம அபிவிருத்தி சங்கங்களின் கலந்துரையாடல்களின் நிமித்தம், நோர்வூட் பிரதேச சபை தவிசாளர் ரவி குழந்தைவேல் அவர்களின் பரிந்துரைக்கமைய, பாடசாலைக் கட்டிடம், சிறுவர் பாடசாலைக்கான பாதுகாப்பு வேலிஅமைத்தல்,குடி நீர் வசதி,பாதை அபிவிருத்தி மற்றும் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள மக்களின்
வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும் நோக்கில் சுயதொழில் வாய்ப்புகளை பெற்றுக் கொடுத்திடும் வகையிலான வேலைத்திட்டங்கள் நோர்வூட் பிரதேச சபை தவிசாளர் ரவி அவர்களால் முன்னெடுக்கப்பட்டன.

இந்நிகழ்வில் நகரசபை உறுப்பினர் ரட்ண மற்றும் பிரதேச சபை உறுப்பினர்களான அசோக்குமார்,பாலேந்திரன்,குனா மற்றும் கிராம சேவை உத்தியோகத்தர்கள், கிராம அபிவிருத்தி சங்க குழுக்கள் ,சமூர்த்தி உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்,சமூக ஆர்வாளர்கள் மற்றும் இளைஞர் அணி அமைப்பார்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Related posts

Leave a Comment