சினிமா 

போயஸ் கார்டன் வீட்டை இளைய மகளுக்கு எழுதி கொடுத்த ரஜினி… தனுஷை காண்டாக்கிய சம்பவம்!

கடந்த 2 வாரங்களுக்கு முன்பு நடிகர் தனுஷும் ஐஸ்வர்யாவும் பிரிந்து வாழப்போவதாக அறிவித்தனர். இருவருக்கும் 16 மற்றும் 14 வயதில் இரண்டு மகன்கள் உள்ள நிலையில் திருமணம் ஆகி 18 ஆண்டுகள் கழித்து பிரிந்து வாழப்போவதாக அறிவித்தனர்.அவர்களின் பிரிவு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் பிரிவுக்கான காரணம் என நாள்தோறும் ஒரு தகவல் வெளியாகி வருகிறது. சில நடிகைகளுடன் தனுஷுக்கு இருந்த தகாத உறவே அவரது திருமண வாழ்க்கை முறிய காரணம் என்றும் கூறப்பட்டது.இதேபோல் ஐஸ்வர்யாவும் சினிமா, இயக்கம், தயாரிப்பு நிறுவனம் என அவர் போக்கிற்கு சென்றதும் காரணம் என தகவல் பரவியது. இருவரும் பிரிந்து வாழ்வதில் ரஜினிக்கு உடன்பாடு இல்லாததால் கணவருடன் தான் சேர்ந்து வாழ வேண்டும் என மகள் ஐஸ்வர்யாவுக்கு ஆர்டர் போட்டார்.அப்பாவின் இன்னொரு முகத்தை பார்த்து மிரண்டு போன ஐஸ்வர்யாவும் தனுஷிடம், அவசரப்பட்டுவிட்டேன், அப்பாவுக்காக நாம் சேர்ந்து வாழலாம் என கெஞ்சியதாகவும் ஆனால் தனுஷ் பிடிவாதமாக இருப்பதாகவும் தகவல் வெளியானது. இதனால் இருவரும் மீண்டும் சேர்ந்து வாழ்வார்களா என்பது கேள்வி குறியாகியுள்ளது.தற்போது ஐஸ்வர்யா கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் இருவருக்கும் இடையிலான பிரச்சனைக்கு போயஸ் கார்டன் வீடுதான் காரணம் என கூறப்படுகிறது. நடிகர் ரஜினிகாந்த் வசித்து வரும் போயஸ் கார்டன் வீட்டை கடந்த சில மாதங்களுக்கு முன்பு இளைய மகளுக்கு எழுதி கொடுத்துவிட்டாராம் ரஜினிகாந்த்.ஆரம்பத்தில் இருந்தே நடிகர் தனுஷுக்கு போயஸ் கார்டன் வீட்டின் மீது ஒரு கண் இருந்துள்ளது. இந்நிலையில் அந்த வீட்டை தனது இளையமகளுக்கு ரஜினி எழுதி கொடுப்பார் என சற்றும் எதிர்பார்க்காத தனுஷுக்கு அந்த விஷயம் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுதான் எதிர்பார்த்த அந்த பெருமைமிக்க வீடு கைவிட்டு போனதால் விரக்தியில் இருந்துள்ளார் தனுஷ். அதன்பிறகுதான் இருவருக்கும் இடையிலான மோதலும் அதிகரித்ததாகவும் கூறப்படுகிறது. போயஸ் கார்டன் வீடுதான் தனுஷ் – ஐஸ்வர்யா இடையே இருந்த பிரச்சனை பிரிவு வரை வருவதற்கு காரணம் என்றும் தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளன.

Related posts

Leave a Comment