Latest | சமீபத்தியது உள்நாடு 

வெல்லவாய- எல்லாவெல நீர்வீழ்ச்சியில் நீராடச் சென்ற மூவர் உயிரிழந்தனர்….

மொனராகலை மாவட்டத்தின் வெல்லவாய – எல்லெவளை நீர்வீழ்ச்சியில் நீராடச் சென்ற மூவர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதில் ஒருவரின் உடலம் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் எமது செய்திச்சேவை வெல்லவாய காவல்துறையுடன் தொடர்புக்கொண்டு கேட்டபோது, இந்த சம்பவம் தொடர்பாக தகவல்கள் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது அ்த்துடன் தமது காவல்துறை உறுப்பினர்கள் அங்கு சென்றுள்ளபோதும் இன்னும் உரிய தகவல்களை பெற்றுக்கொள்ள முடியவில்லை என்றும் வெல்லவாய காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த இடத்தில் தொலைபேசி இணைப்பு உரியமுறையில் செயற்படாமை காரணமாக தமக்கு மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்ளமுடியவில்லை என்று வெல்லவாய காவல்துறையின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Related posts

Leave a Comment