Latest | சமீபத்தியது உள்நாடு 

டொலர் நெருக்கடியால் அரச அச்சகத்தில் கடதாசிகளுக்கு தட்டுப்பாடு…..

அரச அச்சகத்தில் அரச புத்தகங்கள் உள்ளிட்ட அச்சிடும் நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்படும் கடதாசிகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அரசாங்க அச்சக திணைக்களத்தினால் இறக்குமதி செய்யப்பட்ட அச்சு கடதாசிகள் அடங்கிய 8 கொள்கலன்கள் டொலர் கிடைக்காத காரணத்தினால் கொழும்பு துறைமுகத்தில் சில காலமாக தேங்கியுள்ளமையினால் இவ்வாறு கடதாசிகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன் காரணமாக அரசாங்கத்தின் அச்சிடும் பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. தற்போது 6 மாதங்களுக்கு போதுமான அச்சுக் கடதாசிகள் மட்டுமே அரச அச்சகத் திணைக்களத்திடம் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இதன் காரணமாக எதிர்காலத்தில் அச்சிடும் பணிகளில் பெரும் சிக்கல் நிலை உருவாக வாய்ப்புள்ளதாகவும் குறித்த திணைக்கள அதிகாரிகள் கூறுகின்றனர்.

Related posts

Leave a Comment