World | உலகம் 

டெல்லியில் இன்று முதல் 9-12 வரை வகுப்புகளுக்கு பாடசாலைகள் திறப்பு

டெல்லியில் 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் இன்றுமுதல் திறக்கப்படுகின்றன.

அதன்படி ,கல்லூரிகளும் இன்று முதல் திறக்கப்படுகின்றன. பள்ளிநிர்வாகம் நேரடி வகுப்புகள், ஆன்லைன் வகுப்புகள் என இரண்டு வகைகளையும் பயன்படுத்தலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.கொரோனா பாதிப்புகள் குறைந்து வருவதையடுத்து தளர்வுகளை டெல்லி அரசு அறிவித்துள்ளது.

மேலும் இதன்படி கடந்த ஆண்டு டிசம்பரில் மூடப்பட்ட பள்ளிகள் மீண்டும் இன்றுமுதல் திறக்கப்படுகின்றன.பெப்ரவரி 14 முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்களும் பள்ளிக்கு வர அழைக்கப்பட்டுள்ளனர்.

டெல்லியில் நீச்சல் குளங்கள், திரையரங்குகள் அரசு அலுவலகங்கள் போன்றவையும் நூறு சதவீத நபர்களுடன் இயங்க அரசு அனுமதித்துள்ளது.

Related posts

Leave a Comment