உள்நாடு 

பொது போக்குவரத்தில் பயணிக்க தடுப்பூசி அட்டை கட்டாயம்…

பயணிகள் பொது போக்குவரத்து சேவையை பயன்படுத்தும்போது தடுப்பூசி அட்டையை கட்டாயப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம கண்டி பிரதேசத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளாா். இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

சுகாதார அமைச்சினால் சுற்றறிக்கை அல்லது அறிவித்தல் வெளியிடப்படுமாக இருந்தால், முழுமையாக தடுப்பூசியை பெற்றுக்கொண்டவர்கள் மாத்திரமே பொது போக்குவரத்தை பயன்படுத்த முடியும் என்ற தீர்மானத்து வரவேண்டி ஏற்படும்.

மேலும் ,இதுதொடர்பில் சுகாதார அமைச்சே தீர்மானங்களை மேற்கொள்ள வேண்டும். அவ்வாறு சுகாதார பிரிவு ஆலோசனை பெற்றுக்கொடுக்குமாக இருந்தால் தடுப்பூசி பெற்றுக்கொண்டவர்களுக்கு மாத்திரமே பொது போக்குவரத்தை பயன்படுத்த முடியும் என்று அறிவிக்க வேண்டி ஏற்படும்.

Related posts

Leave a Comment