லதா மங்கேஷ்கர் சமாதியில் குவியும் பொதுமக்கள்…
மும்பையில் உள்ள சிவாஜி பூங்காவில் இசைக்குயில் லதா மங்கேஷ்கர் தகனம் செய்யப்பட்ட இடத்தில் பொதுமக்கள் இன்று காலை முதல் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இதன்படி ,இந்தியாவின் இசைக்குயில் என்று போற்றப்பட்ட பிரபல பின்னணி பாடகி லதா மங்கேஸ்கர் நேற்று மரணம் அடைந்தார். அவரது உடலுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் நேரில் அஞ்சலி செலுத்தியதையடு
த்து, இரவு 7 மணி அளவில் முப்படைகள் மற்றும் மாநில அரசு மரியாதையுடன் லதா மங்கேஷ்கரின் உடல் தாதர் சிவாஜி பார்க் மைதானத்தில் தகனம் செய்யப்பட்டது.
இதற்கிடையே மராட்டியத்தில் லதா மங்கேஷ்கருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இன்று பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ,இந்நிலையில் மும்பையில் உள்ள சிவாஜி பூங்காவில் இசைக்குயில் லதா மங்கேஷ்கர் தகனம் செய்யப்பட்ட இடத்தில் பொதுமக்கள் இன்று காலை முதல் வருகைத்தந்து தங்களது அஞ்சலியை செலுத்தி வருகின்றனர்.