எம்.பிகளுக்கு தொற்று உறுதியாகி வரும் நிலையில் நாடாளுமன்ற அமர்வுகள் இன்று மீண்டும் ஆரம்பம்……

நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்ற பணியாளர்கள் பலருக்கு கோவிட் தொற்று உறுதியாகி வரும் நிலையில், நாடாளுமன்ற அமர்வுகள் இன்றைய தினம் நடைபெறவுள்ளது.

நாடாளுமன்ற அமர்வுகளை ஒத்தி வைப்பதற்கு எவ்வித தீர்மானங்களும் எடுக்கப்படவில்லை என நாடாளுமன்றின் உயர் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டது போன்று இன்று நாடாளுமன்ற அமர்வுகள் நடைபெறும் என சுட்டிக்காட்டியுள்ளார்.

சபாநாயகர், அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், ராஜாங்க அமைச்சர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் என சுமார் 50 பேர் வரையில் அண்மையில் கோவிட் தொற்றுக்கு இலக்காகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

Leave a Comment