உள்நாடு 

சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் கைது…

இலங்கை கடல் எல்லைக்கு அத்துமீறி பிரவேசித்து, சட்டவிரோதமாக மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 11 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் மூன்று மீன்பிடி படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

அதன்படி ,நேற்று (7) இரவு நெடுந்தீவுக்கு அருகில் குறித்த மீனவர்கள் கைது செய்யப்பட்டதாகவும், அவர்கள் இராமேஸ்வரம் பகுதியை சேர்ந்தவர்கள் என்றும் கடற்படை பேச்சாளர் தெரிவித்தார்.

மேலும் ,இந்த 11 இந்திய மீனவர்களையும் மயிலிட்டி கடற்றொழில் திணைக்களத்தினூடாக நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Related posts

Leave a Comment