சுகாதார சேவை தொழிற்சங்கங்களின் போராட்டம் இன்றும் தொடர்கின்றது…..

தாதியர்கள் உள்ளிட்ட 18 சுகாதார சேவை தொழிற்சங்கங்கள் முன்னெடுத்துள்ள பணிப்புறக்கணிப்பு நடவடிக்கை இன்றும் தொடர்கின்றது.

இவர்களது போராட்டம் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு சுகாதார அமைச்சரினால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக ஒன்றிணைந்த துணை வைத்திய சேவை ஒன்றியத்தின் தலைவர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.

சம்பள உயர்வு உள்ளிட்ட 7 முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து தாதியர்கள் உள்ளிட்ட 18 சுகாதார சேவை தொழிற்சங்கங்கள் நேற்று காலை முதல் பணிப்புறக்கணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

Leave a Comment