நாட்டு மக்களுக்கு வர்த்தக அமைச்சர் வெளியிட்ட மகிழ்ச்சியான தகவல்!
லங்கா சதொச நிறுவனம் நாட்டு மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் அத்தியாவசிய பொருட்கள் உள்ளடங்கிய விசேட நிவாரண பொதி ஒன்றை அறிமுகப்படுத்த உள்ளதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், 998 ரூபாவுக்கு இந்த விசேட நிவாரண பொதி வழங்கப்படுகின்றது. வர்த்தக அமைச்சில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அமைச்சர் பந்துல குணவர்தன (Bandula Gunawardane) இந்த விடயங்களைத் தெரிவித்துள்ளார்.
குறித்த நிவாரண பொதியில், 400 கிராம் நூடில்ஸ், 100 கிராம் நெத்தலி கருவாடு, 5 கிலோகிராம் நாட்டரிசி, 100 கிராம் தேயிலை மற்றும் 100 கிராம் மஞ்சள் தூள் உள்ளடங்குவதாக தெரிவித்துள்ளாா்.