Uncategorized 

‘ஸ்கீரின் ஷாட்’ எடுப்பவர்களுக்கான எச்சரிக்கை…

வாட்ஸ்ஆப்பிற்கு இணையாக ஃபேஸ்புக் மெசேஞ்சரில்புதிய சேவைகள் சமீப காலமாக இணைக்கப்பட்டு வருகின்றன.

இதன்படி ஆடியோ, விடியோ தொலைப்பேசி அழைப்பு வசதிகள் மெசேஞ்சரில் கடந்த ஆண்டு சேர்க்கப்பட்டன.

வாட்ஸ்ஆப்பில் உள்ள தானியங்கி தகவல் அழியும் சேவையைப் போல் மெசேஞ்சரிலும் இந்த சேவை இணைக்கப்பட்டது.

அந்நிலையில் , தற்போது நாம் ஒருவருக்கு அனுப்பும் தானாக அழியும் தகவலை அவர் ‘ஸ்கீரின் ஷாட்’ எடுத்தால், அதனை எமக்கு குறுந்தகவலாக எச்சரிக்கை செய்யும் புதிய சேவையை தற்போது மெசேஞ்சர் வழங்குகின்றது.

இந்தச் சேவையைப் செயற்படுத்த மெசேஞ்சரில் உள்ள ‘சீக்ரேட் கான்வா்ஷேசன்’ உள்ளே சென்று- ‘டிஸ்அப்பியரிங் மெசேஜஸ்’ என்பதை தேரிவு செய்ய வேண்டும்.

இதன் மூலம் தகவல் பரிமாற்றம் பாதுகாப்பாகவும், அனுப்பிய தகவலில் வெளிப்படைத் தன்மையும் இருக்கும் என்று ஃபேஸ்புக் நிறுவனமான மெட்டா தெரிவித்துள்ளது.

மேலும் தற்போது மெசேஞ்சரில், வாட்ஸ்ஆப்பில் இருப்பதைப்போல் குறிப்பிட்ட தகவலைத் தேரிவு செய்து பதிலளிக்கும் வசதியும், மற்றவர்கள் பதிலளிப்பதற்காகப் பதிவு செய்து கொண்டிருப்பதைத் தெரிந்து கொள்ளவும் முடியும் என்றும் அத்தோடு அனுப்பப்பட்ட தகவலை சேமித்து வைத்துக் கொள்ளவும், விடியோக்களை அனுப்புவதற்கு முன்பு எடிட் செய்து கொள்ளவும் பல புதிய சேவைகளை ஃபேஸ்புக் மெசேஞ்சா் அறிமுகம் செய்துள்ளது.

Related posts

Leave a Comment