O/L பரீட்சார்த்திகளுக்கான முக்கிய அறிவித்தல்…..
2021 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் எதிர்வரும் 17 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த தகவல் குறிப்பிடப்பட்டுள்ளது.
எதிர்வரும் 10ஆம் திகதியுடன் விண்ணப்ப திகதி நிறைவடையவுள்ள நிலையிலேயே, இவ்வாறு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது.