Latest | சமீபத்தியது Politics | அரசியல் உள்நாடு 

ஐ.தே.க. தேசிய அமைப்பாளராக சாகல ரத்னாயக்க…..

ஐக்கியதேசிய கட்சியின் தேசிய அமைப்பாளராக முன்னாள் அமைச்சர் சாகல ரத்னாயக்க நியமிக்கப்பட்டுள்ளதாக கட்சியின் பொதுச்செயலாளர் பாலித்த ரங்கே பண்டார தெரிவித்துள்ளார். மேற்படி நியமனம் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்கவினால் வழங்கப்பட்டுள்ளதுடன் அதற்கு கட்சியின் செயற்குழுவும் ஒப்புதல் அளித்துள்ளதாக அவர் தெரிவத்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்; இதற்கு முன்னதாக இப்பதவிக்கு நவீன் திஸாநாயக்கவை நியமிப்பதற்கு செயற்குழு தீர்மானித்திருந்தது. எனினும் அவர் அந்தப்பதவியை ஏற்க மறுத்ததன் காரணமாக சுமார் ஒரு வருடமாக அப்பதவி வெற்றிடமாகவே காணப்பட்டது.

இதன்போது ஐக்கியதேசிய கட்சியின் உபதலைவராக கடமையாற்றியுள்ள சாகல ரத்னாயக்கவை குறித்த வெற்றிடத்திற்கு நியமிப்பது குறித்து கட்சியின் செயற்குழுவிற்கு தெரிவிக்கப்பட்டதுடன் அத்தீர்மானத்திற்கு ஒப்புதலும் அளிக்கப்பட்டது. மேலும் இரண்டு முக்கிய வெற்றிடங்களுக்கு எதிர்வரும் காலங்களில் தமிழ் மற்றும் முஸ்லிம் பிரதிநிதிகள் இருவர் நியமிக்கப்படுவார்கள் என்றார்.

Related posts

Leave a Comment