Latest | சமீபத்தியது World | உலகம் 

கொலம்பியாவில் மண்சரிவு: 14 பேர் பலி, 35 பேர் படுகாயம்…..

கொலம்பியா ரிசரால்டாவில் இடம்பெற்ற பாரிய மண் சரிவில் சிக்கி 14 பேர் பரிதாமாக உயிரிழந்துள்ளனர். மேற்கு கொலம்பியாவில் கடந்த சில நாட்களாக கடும் மழை பெய்து வரும் நிலையில் பெரேரா நகராட்சிக்கு உட்பட்ட ரிசரால்டா என்ற பகுதியில் திடீரென நேற்று செவ்வாய்க்கிழமை 8 ஆம் திகதி மண்சரிவு ஏற்பட்டுள்ளது.

அப் பகுதியில் பெரும்பாலான வீடுகள் மரத்தால் செய்யப்பட்டவை என்பதால் 60க்கும் மேற்பட்ட வீடுகள் மண்சரிவில் சிக்கி தரைமட்டமாகி உள்ளன. மேலும் இம் மண்சரிவு அனத்தத்தில் சுமார் 14 பேர் உயிரிழந்துள்ளதுடன் 35 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

இதனைத்தொடர்ந்து அப் பகுதியில் மீட்பு பணிகள் மும்முரமாக இடம்பெற்று வருகின்றன. இந்நிலையில், பெரேரா நகராட்சியின் மேயர் கார்லோஸ் மாயா, அப்பகுதியில் தொடர்ந்து மண்சரிவு ஏற்படும் அபாயம் இருப்பதால், உயிரிழப்புகளை தவிர்க்க மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும் என்று எச்சரித்துள்ளார். கொலம்பியா நாட்டின் அதிபர் இவான் டியூக், மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

Related posts

Leave a Comment