உள்நாடு 

சுகாதார அமைச்சுடனான கலந்துரையாடல் தோல்வி – சுகாதார ஊழியர்களின் போராட்டம் தொடர்கிறது

சுகாதார அமைச்சுடன் மேற்கொள்ளப்பட்ட கலந்துரையாடல் இணக்கப்பாடின்றி நிறைவடைந்துள்ளதாக சுகாதார ஊழியர்களின் தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில்,பணிப்புறக்கணிப்பு போராட்டம் தொடர்ச்சியாக இடம்பெறும் என அந்த சங்கம் தெரிவித்துள்ளது.

சம்பள உயர்வு உள்ளிட்ட 7 முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து தாதியர்கள் உள்ளிட்ட 18 சுகாதார சேவை தொழிற்சங்கங்கள் நேற்று காலை முதல் பணிப்புறக்கணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன. இதன்காரணமாக பல வைத்தியசாலைகளின் சேவைகள் பாதிப்படைந்துள்ளன.

இதேவேளை, சுகாதார ஊழியர்களினால் முன்னெடுக்கப்படும் எதிர்ப்பு போராட்டம் காரணமாக கொழும்பு நகர மண்டப பகுதியில் இன்று மதியம் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

Leave a Comment