Sport | விளையாட்டு 

தேசங்களுக்கான ஆபிரிக்க கிண்ணம்: சம்பியனான செனகல்….

கமரூனில் நடைபெற்று வந்த தேசங்களுக்கான ஆபிரிக்க கிண்ணத் தொடரில் செனகல் சம்பியனானது. நேற்றுமுன்தினம் (07) அதிகாலை நடைபெற்ற எகிப்துடனான இறுதிப் போட்டியில் வென்றே செனகல் சம்பியனாகியிருந்தது.

போட்டியின் வழமையான நேரத்தில் இரண்டு அணிகளும் கோலெதனையும் பெறாததோடு, மேலதிக நேரத்திலும் கோலெதுவும் பெறப்படாத நிலையில், பெனால்டியில் 4-2 என்ற ரீதியில் வென்றே செனகல் சம்பியனாகியிருந்தது.

ஆபிரிக்க கோப்பை கால்பந்து தொடரில் 2002-ம் ஆண்டு கேமரூனிடமும், 2019-ம் ஆண்டு அல்ஜீரியாவிடம் இறுதிப் போட்டியில் தோற்று கோப்பையை கோட்டை விட்ட செனகல் அணி 2022ம் ஆண்டுக்கான போட்டியில் முதல் முறையாக கோப்பையை கைப்பற்றி புதிய வரலாறு படைத்திருக்கிறது.

இதேவேளை ஆபிரிக்க கால்பந்து கோப்பையை செனகல் முதல் முறையாக வென்றுள்ள நிலையில், அந்நாட்டு மக்கள் வெற்றியை கொண்டாடி வருகின்றனர். இதையடுத்து வெற்றிக் கொண்டாட்டத்திற்காக சம்பளத்துடன் கூடிய தேசிய விடுமுறை வழங்கப்படுவதாக செனகல் அதிபர் மேக்கி சால் அறிவித்து உள்ளார்.

Related posts

Leave a Comment