Latest | சமீபத்தியது மலையகம் 

தேசிய கராத்தே போட்டியில் முதல் முறையாக எட்டியாந்தோட்டை தமிழ் மாணவன் சாதனை!

இலங்கை கராத்தே தோ சம்மேளனம் நடாத்திய 2021 ம் ஆண்டுக்கான தேசிய கராத்தே போட்டி கடந்த 2022 பெப்ரவரி 5 மற்றும் 6ம் திகதிகளில் பண்டாரகம உள்ளக விளையாட்டரங்கில் மிகவும் கோலாகலமாக நடைபெற்றது. இப்போட்டியில் புணாகோஷி சோத்தோகான் கராத்தே சங்கத்தின் எட்டியாந்தோட்டை கிளையை பிரதிநிதித்துவப்படுத்தி பத்து கராத்தே வீர வீராங்கனைகள் பங்குபற்றியதோடு அனைவருமே வெற்றி பெற்றனர்.

இக்குழுவில் ஒரே ஒரு தமிழ் மாணவராக களமிறங்கிய ஜி.ஹேணொக்சான் மிகவும் திறமையாக போட்டியிட்டு தங்கப் பதக்கத்தை சுவீகரித்துக் கொண்டமை வரலாற்று சாதனையாகும்.
இவர் 9 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான ஊதா பட்டி பிரிவில் 25 எடைக்கு மேல் கும்தே போட்டியில் பங்குபற்றிய தோடு இவருக்கு கிடைத்த நான்கு தொடரையும் அதிகூடிய புள்ளியுடன் வெற்றிக் கொண்டமை விசேட அம்சமாகும்.

எட்டியாந்தோட்டை பிரதேச வரலாற்றில் தேசிய போட்டியில் வெற்றி பெற்ற முதல் தமிழ் கராத்தே வீரர் என்ற பெருமை இவரையே சாரும்.

கே/தெஹி/ இராமகிருஷ்ணா ஆரம்ப பாடசாலையில் நான்காம் தரத்தில் கல்வி பயின்றுவரும் இம் மாணவன் எட்டியாந்தோட்டை மீபிட்டிகந்த தோட்டத்தில் வசித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும் இம் மாணவன் இவ்வருடத்தில் கருப்பு பட்டி டிப்ளோமா தேர்வுக்கு தெரிவாகியுள்ளார்.
கேகாலை மாவட்ட கராத்தே தோ சம்மேளனத்தின் பொதுச் செயலாளராகவும் கல்வி அமைச்சு, விளையாட்டுத்துறை அமைச்சு, தேசிய விளையாட்டு விஞ்ஞான நிறுவனம் அங்கீகரிக்கப்பட்ட கராத்தே தலைமை பயிற்சியாளரான சென்சே கே.சிவகுமார் அவர்களின் கீழ் இம் மாணவன் பயிற்சி பெற்று வருகின்றமை சிறப்பு அம்சமாகும்.

இம் மாணவனின் தாய் எட்டியாந்தோட்டை புனித மரியாள் தேசிய பாடசாலையில் ஆசிரியையாக கடமையாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

முயற்சித்தாள் எதையும் வெல்ல முடியும். தங்கப்பதக்கதை வென்ற மாணவனையும் பயிற்றுவித்த பயிற்சியாளரையும் எட்டியாந்தோட்டை தமிழ் சமூகம் வாழ்த்துகின்றது.

Related posts

Leave a Comment