மலையகம் 

பதுளை பொது வைத்தியசாலையின் வைத்தியர்களுக்கு கொரோனா!

பதுளை பொது மருத்துவமனையின் 15 வைத்தியர்கள் உட்பட 55 மருத்துவமனை ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதனை அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் ஊவா மாகாண இணைப்பாளரும் பதுளை பொது மருத்துவமனையின் சிரேஷ்ட வைத்திய அதிகாரியுமான வைத்தியர் பாலித ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

மேலும் ,பதுளை பொது வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் இருந்த 09 வைத்தியர்களில் 06 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இரு தாதிகள் மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவில் பணிபுரியும் கனிஷ்ட ஊழியர் ஒருவரும் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

Related posts

Leave a Comment