Politics | அரசியல் 

வவுனியா மாவட்ட அபிவிருத்தி குழு தலைவரின் அலுவலகம் கட்சி அலுவலமாக மாறியுள்ளது? மக்கள் விசனம்

வவுனியா மன்னார் வீதியில் அமைந்துள்ள மாவட்ட அபிவிருத்தி குழு தலைவரின் அலுலகத்தினை அவரின் கட்சி உறுப்பினர்கள் பெரும்பாலும் பயன்படுத்துவதாக பொதுமக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

தேவை நிமித்தம் குறித்த அலுவலகத்திற்கு பொதுமக்கள் செல்கின்ற சமயத்தில் அங்கு அபிவிருத்தி குழு தலைவரின் கட்சி (ஈழமக்கள் ஜனநாயக கட்சி) உறுப்பினர்கள் நிற்பதினால் பொதுமக்களினால் அங்கு சேவையினை பெறுவதில் சிரமத்தினை எதிர்நோக்கியுள்ளனர். அலுவலகத்திற்குள் உத்தியோகத்தர்களின் ஆசனங்களில் அமர்ந்திருந்து அரசியல் செய்வதாகதாவும் மக்கள் சுட்டிக்காட்டியிருந்தனர்.

மேலும் வேலைவாய்ப்புக்கள் , தொழில் முயற்சிகளுக்காக அங்கு செல்கின்றவர்களிடம் அங்கு நிற்கும் ஈழமக்கள் ஜனநாயக கட்சி உறுப்பினர்கள் அபிவிருத்தி குழு தலைவரிடம் தாம் கதைத்து தேவைகளை நிறைவேற்றுவதாக லஞ்சம் பெறுகின்றதுடன் அவர்களின் எவ்வித தேவைகளையும் நிறைவேற்றாது ஏமாற்றி வருகின்றனர்.

இவ்விடயம் தொடர்பில் உரிய அதிகாரிகள் கவனம் செலுத்தி அபிவிருத்தி குழு தலைவரின் அலுவலத்தினை அரச தேவைகளுக்காக மாத்திரம் செயற்பட வழிசமைக்குமாறு பொதுமக்கள் மற்றும் கட்சியின் ஆதரவாளர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related posts

Leave a Comment