Latest | சமீபத்தியது உள்நாடு 

அனைத்து விவசாயிகளுக்கும் நட்ட ஈட்டை வழங்குவதன் மூலம் ஜனாதிபதியின் இலக்கை அடைய முடியும்!

  • பொருளாதார மத்திய நிலையங்களின் தலைவர் அருணசாந்த ஹெட்டியாராச்சி
    தெரிவிப்பு –

(

நெல் விவசாயிகளுக்கு மாத்திரம் நட்டஈட்டை வழங்க விவசாய அமைச்சு தயாராகி வருகின்றமை எமக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நட்ட ஈட்டை அனைத்து விவசாயிகளுக்கும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இலங்கையின் அனைத்து பொருளாதார மத்திய நிலையங்களின் தலைவர் அருணசாந்த ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

நுவரெலியாவில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கின்ற பொழுதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.தொடரந்து அவர் ஆங்கு கருத்து தெரிவிக்கையில்,

ஆராசாங்கம் விவசாயம் தொடர்பாக எடுத்த பிழையான தீர்மானம் காரணமாக இலங்கையில் இருக்கின்ற அனைத்து விவசாயிகளும் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நட்ட ஈட்டை வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.அதனை விடுத்து நெல் உற்பத்தி செய்கின்ற விவசாயிகளுக்கு மாத்திரம் நட்ட ஈட்டை வழங்க நடவடிக்கை எடுப்பது ஏனைய விவசாயிகளுக்கு இழைக்கப்படுகின்ற பாரிய ஒரு அநீதியாகும்.

ஜனாதிபதியின் நோக்கம் விவசாயிகளை பாதுகாப்பது எனவே அனைத்து விவசாயிகளும் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும்.ஜனாதிபதி விவசாயம் தொடர்பாக மேற்கொண்ட தீர்மானத்தை தவறு என்று கூறுவதைவிட பிழையான நேரத்தில் எடுக்கப்பட்ட முடிவாகவே நாங்கள் கருதுகின்றோம்.

நட்டஈட்டை வழங்க தீரமானித்திருப்பது ஒரு சிறந்த விடயம் அதனை நாங்கள் வரவேற்கின்றோம்.ஆனால் ஒரு குறிப்பிட்ட விவசாயிகளுக்கு மாத்திரம் வழங்காமல் அனைவருக்கும் வழங்க வேண்டும் அப்படி செய்தால்தான் அனைத்து விவசாயிகளையும் பாதுகாக்க முடியும் ஜனாதிபதியின் நோக்கத்தையும் அடைய முடியும்.

சுpறிய விவசாயிகள் அனைவருக்கேனும் இந்த நட்ட ஈட்டை வழங்க வேண்டும்.காரணம் சிறய விவசாயிகள் தங்களுடைய விவசாயத்தின் மூலமாக கிடைக்கின்ற வருமானத்தை கொண்டே அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்து கொள்கின்றார்கள்.

தங்களுடைய பிள்ளைகளின் கல்வி நடவடிக்கை தங்களுடைய உணவு ஏனைய தேவைகள் அனைத்திற்கும் தங்களுடைய விவசாயத்தை மாத்திரமே நம்பியிருக்கின்றார்கள்.எனவே அவர்கள் தற்பொழுது பெரும் பொருளாதார நெருக்கடியை சந்தித்து இருக்கின்றார்கள்.

தற்பொழது இரசாயன உரவகைகள் சந்தையில் கிடைத்தாலும் அதன் விலைகள் பல மடங்கு அதிகரித்துள்ளது.இரண்டாயிரம் ரூபாவிற்கு கொள்வனவு செய்த பசளை இன்று ஒன்பதாயிரத்து ஜந்நூறு ரூபாய்;க்கு வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.3200 ரூபாவிற்கு கொள்வனவு செய்த யூரியா இன்று 23000 ரூபாய்க்கு கொள்வனவு செய்ய வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.

எனவே இந்த விலை அதிகரிப்பு காரணமாக நுவரெலியா விவசாயிகள் உட்பட அனைத்து விவசாயிகளும் பாதிக்கப்பட்டுள்ளார்கள் எனவே அனைவருக்கும் நட்ட ஈட்டை வழங்கி விவசாயிகளை பாதுகாக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

Leave a Comment