உள்நாடு 

ஆடை தொழிற்சாலை பணியாளர்கள் பஸ் கவிழ்ந்து விபத்து……

பொலன்னறுவை – சிங்கபுர அலிவங்குவை பிரதேசத்தில் பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியதில் 8 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று காலை இந்தச் சம்பவம் இடம்பெற்றதாகவும் பஸ் சாரதியின் பொறுபற்ற செயற்பாடே விபத்துக்கான காரணம் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஆடை தொழிற்சாலை ஒன்றில் பணிபுரியும் பொலன்னறுவை தொடக்கம் லங்காபுரை வரையிலான பணியாளர்களை தொழிற்சாலைக்கு ஏற்றிச் செல்லும் தனியார் பஸ்ஸே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் போது 23 பணியாளர்கள் அதில் பயணித்துள்ளனர். தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

Related posts

Leave a Comment