Medicine Iமருத்துவம் உள்நாடு 

ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டது – சுகாதார அமைச்சில் இருந்து வெளியேறினர் டெங்கு ஒழிப்பு உதவியாளர்கள்!

சுகாதார அமைச்சு வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த டெங்கு ஒழிப்பு உதவியாளர்கள் அங்கிருந்து வெளியேறியுள்ளனர்.

எதிர்வரும் 21ஆம் திகதி சந்திப்பொன்றை நடத்துவதாக எழுத்துமூல உறுதி வழங்கப்பட்டதை அடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றுள்ளனர்.

டெங்கு ஒழிப்பு உதவியாளர் ஆயிரத்து 169 பேரின் பதவிகளை நிரந்தரமாக்குமாறு கோரி நேற்று சுகாதார அமைச்சுக்கு விஜயம் செய்த டெங்கு ஒழிப்பு உதவியாளர் சங்கப் பிரதிநிதிகள் இந்தப் போராட்டத்தை முன்னெடுத்தனர்.

அத்தோடு, பிரச்சினைக்கு தீர்வு காணும் வரை தாம் அவ்விடத்தைவிட்டு வெளியேறமாட்டோமென ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

Leave a Comment