உள்நாடு 

இலங்கையில் Tik-Tok போன்ற சமூக ஊடகங்களை கட்டுப்படுத்த சட்டங்கள் வேண்டும்: நிமல் வலியுறுத்து

பாரிய கலாசார, சமூக மற்றும் தேசிய அனர்த்தங்களை ஏற்படுத்தும் Tik-tok போன்ற சமூக ஊடகங்களை கட்டுப்படுத்த சட்டங்கள் கொண்டுவரப்பட வேண்டும் என அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா வலியுறுத்தியுள்ளார்.

இந்த விடயத்தில் உடனடி கவனம் செலுத்தி சமூக ஊடகங்களை ஒழுங்குபடுத்த புதிய சட்டங்கள் கொண்டுவரப்பட வேண்டிய தருணம் இது எனவும் அவர் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

சமூக ஊடகங்களை முற்றிலுமாகத் தடை செய்ய வேண்டும் என்று தான் வாதிடவில்லை என்றும் ஆனால் அவற்றைக் கட்டுப்படுத்தும் பொறிமுறையே காலத்தின் தேவை என்றும் அவர் கூறினார்.

Related posts

Leave a Comment