Latest | சமீபத்தியது Politics | அரசியல் உள்நாடு மலையகம் 

தொழிலாளர்களுக்கு வழங்குவதாகக் கூறிய மாவு எங்கே? – பாராளுமன்ற உறுப்பினர் இராதாகிருஷ்ணன்

தொழிலாளர்களுக்கு வழங்குவதாக கூறிய மாவு எங்கே என கேள்வி எழுப்பிய நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராதாகிருஷ்ணன், எதற்காக அரசாங்கம் தொழிலாளர்கள் மத்தியில் பொய் சொல்கிறது எனவும் கேள்வி எழுப்பினார்.

பாராளுமன்றத்தின் நேற்றைய (09) அமர்வில் கலந்துகொண்டு தொடர்ந்து உரையாற்றிய அவர், மாகாணசபை முத்திரை திருத்தச் சட்டத்தை அரசாங்கம் கொண்டுவந்துள்ளது. ஆனால் நாட்டில் மாகாணசபைகளே இல்லை என்பதே அவர்களுக்கு தெரியாத விடயமாக இருக்கிறது எனவும் தெரிவித்தார்.

தொழிலாளர்களுக்கு 10 கிலோ கிராம் மாவு வழங்குவதாக கூறினார்கள். சம்மந்தப்பட்ட அமைச்சரும் பெப்ரவரி முதல் வழங்குவோம் என்றார். ஆனால் இதுவரையில் தொழிலாளர்களுக்கு மாவு கிடைக்கவில்லை எதற்காக பொய் சொல்கிறீர்கள் எனவும் அவர் இதன்போது கேள்வி எழுப்பினார்.

வரவு செலவு திட்டம், ஜனாதிபதி அக்கிராசன உரையிலும் மலையக மக்களுக்கு எந்தவிதமான நிவாரணம் வழங்கப்படவில்லை. தற்போது EPF, ETF இலும் அரசாங்கம் கை வைத்துள்ளது. இது மோசமான செயல். அரசாங்கத்தின் வங்குரோத்து நிலை இதனூடாக தெரிகிறது எனவும் தெரிவித்தார்.

Related posts

Leave a Comment